Sunday 12 December 2010

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த ஆரியர்கள் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை

கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை.
காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர்.
செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழரின் மரபுப் பட்டியல் வாசிக்கிறது. விசயாலயச் சோழன் முதல் இராசேந்திரன் வரையிலான வாரிசுமுறையை வரிசைப்படுத்துகிறது, வகைப்படுத்துகிறது.
ஆரியத்தை வேரூன்றச் செய்த சோழ மரபிற்குக் குலக் கொழுந்தைக் கொலை செய்து பரிசளித்தது ஆரியம். பிரம்மதேயம் என்று பல்லவர் வழியில் பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கிய சோழர்களுக்குப் பரிசாகப் பார்ப்பனியம் அளித்த கொடைதான் இளவரசர் ஆதித்த கரிகாலன் படுகொலை.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்க காலத்துக்குப் பின் சோழர் மரபைத் தொடங்கி வைத்தவன் விசயாலயச் சோழன். இவன் மார்பில் எண்ணற்ற விழுப்புண்கள் இவர்தம் வீரத்திற்குப் பதக்கங்களாகத் திகழ்வதாக சீறும் செவிற்றிரு மார்பு தொண்ணூறும்
ஆறும் படுத்தழும்பின் ஆழத்தோன் என்று குலோத்துங்க சோழனுலா கூறும். விசயாலயனுக்குப்பின் அவருடைய மகன் இராசகேசரி முதலாம் ஆதித்த கரிகாலன் பட்டத்திற்கு வந்தார். இவருடைய மறைவிற்குப் பின் இரு புதல்வர்களான முதற் பராந்தகன், கன்னர தேவனில், முதற் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி இவரைக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடும், இவ்வாறு:
ஈழ முத்தமிழ்க் கூடலூர் சிதைத்து இகழ் கடந்ததோர் இசை பரந்தும்
முதலாம் பராந்தகனின் மகன் இளவரசன் தக்கோலப் போரில் இறந்தான். எனவே, பராந்தகனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன் அரியணை ஏறினான். இவர் மனைவியே செம்பியன் மாதேவி. கண்டராதித்தனின் மகன் உத்தமசோழன். உத்தம சோழன் கண்டராதித்தன் இறந்தபோது இள வயதினன் ஆகையால் தம்பி அரிஞ்சயன்ஸ் அரியணை ஏறி ஆத்தூரில் நடந்த போரில் இறந்து விட்டான். இந்த அரிஞ்சயனுக்குப் பிறந்த சுந்தர சோழனின் மூத்த மகன் இரண்டாம் ஆதித்த கரிகாலன். இவருடைய தம்பிதான் அருள்மொழி என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜன்.
ராஜராஜனின் அண்ணன் இரண்டாம் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து கொலை செய்யப்படாமல் ஆட்சியில் இருந்திருந்தால் சோழர் வரலாற்றில் ராஜராஜன் என்ற பெயரே இடம் பெறாமல் போயிருக்கும்.
இந்தக் கரிகாலனின் படுகொலையைச் செய்தவர்கள் யார் எனும் வரலாற்று உண்மை மறைக்கப் பெற்றிருக்கிறது.
அந்தச் செய்திகளை  மறைக்கப்பட்டவற்றை அறியும் முன்னர் அடுத்து நிகழ்வுற்றவற்றை முன்னர்க் காண்போம்.
மகன் படுகொலையானதால் மன்னன் சுந்தரசோழன் நிலை குலைந்தார். காஞ்சியிலிருந்த பொன்னாலான அரண்மனை மாளிகையில் உயிர் துறந்தமையால், பொன் மாளிகை துஞ்சிய தேவர் ஆனார்
இராசராசசோழன் தந்தை இறந்ததும், தனயன் இல்லாது படுகொலையானதுமான சூழலில் பதவியைத்தான் ஏற்காது. உத்தமசோழனை அரியணை ஏறும்படி இசைவளித்து, பதினாறு ஆண்டுகளுக்குப்பின் உத்தமசோழன் மாண்ட பின்னர் சோழப் பேராசனானார்.
இந்த வரலாற்றுச் செய்தியைக் கோவையாக நமக்கு அளித்த வரலாற்று அறிஞர்  வரலாற்றுக் களஞ்சியம் பேராசிரியர் ப. நீலகண்ட சாஸ்திரி தம்முடைய சோழர் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் ஓர் உண்மையை மறைத்துவிட்டார்.
உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் பெயர்ப் பட்டியல் தெளிவாக இருக்கிறது. இராசராசசோழனுக்கு முன் அரியணையேறிய உத்தமசோழனே கொலைச் சதியில் பங்கு கொண்டவர் என்றும் கூறிச் சென்று விட்டார்.
ஆனால், உத்தம சோழனுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் பங்கு இருந்திருக்க வேண்டும் என்று கூறத்தக்க நேரடியான அல்லது மறைமுகமான ஆதாரம் ஏதுமில்லை என்பதோடு, நீலகண்ட சாஸ்திரியும் சுட்டிக் காட்டவில்லை.
உடையார்குடி கல்வெட்டு நீலகண்ட சாஸ்திரி அறியாமல் இருந்திருக்கலாம் என்று சமாதானமும் கூற முடியவில்லை. உடையார்குடிக் கல்வெட்டு யார் யார் கொலைகாரர்கள் என்று பெயரையே கூறுகிறது. அதைக் குறிப்பிடாமல் நீலகண்ட சாஸ்திரி,
சுந்தர சோழனின் கடைசி நாட்கள் இல்லத்தில் ஏற்பட்ட துன்ப நிகழ்ச்சியால் பாதிப்பிற்குள்ளாயிற்று. உடையார்குடி கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அரசனின் ஆணையின் பேரில், பாண்டியன் முடித் தலை கொண்ட கரிகாற் சோழனின் கொலைச் சதியில் பங்கேற்றவர்களின் சிலரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கச் சொல்லி ஆணையிட்டதன் பேரில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார் என்று மட்டும் கூறுகிறார்.
Sundara Chola’s last days appear to have been eroded by a domestic trajedy. As seen from UdaiyarKudi grant dated in the II year of Raja Raja (577of 1977) Records the measures taken by the sabha of sri viranarayana saturvedi mangalam under order from the king for the confiscation and sale of the properties of some persons who were liable for the treason as they had murdered karikal chola who took the head of the Pandya.
கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் அவர்கள் பெயர்கள் இவை என்பவையெல்லாம் குறிப்பிடாமல் சில ஆட்கள் (Some Persons) என்று மழுப்பிச் செல்கிறார் இந்தக் கற்றறிந்து வரலாற்றில் துறைபோகிய பேராசிரியர்.
ஆதித்த கரிகாலன் கொலையுண்டு, சுந்தர சோழனும் மாண்டு, பதினாறு ஆண்டுகள் உத்தம சோழனும் ஆண்டு அவனும் மாண்டு, அதன்பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் இந்த நடவடிக்கையை ராஜராஜன் மேற்கொண்டதற்குக் காரணம், வலிமைமிக்க சதிகாரர்களைத் தண்டிக்கத் தடை ஏதோ இருந்தது என்றும், அத்தடை உத்தமசோழனே என்றும் கொலைப் பழியை முழுமையாக உத்தமசோழன் மீது போடுகிறார்.
எவ்வித நேரடி ஆதாரமுமில்லாமல், அவர் அவிழ்த்துவிடும் புதிய கற்பனை வரிகள் இவை.
It seems impossibe under the circumstance to acquit Uthama Chola of a part in the consbiracy that resulted in the final murder of the heir apparent. He formed a party of his own and brought about the murder of Aditya II and having done so he forrced the hands of sundara Chola to make him his heir apparent and as there was no help for it sundara chola had to... என்றோ கொலை செய்த பார்ப்பனக் கொலையாளிகளை வரலாற்றிலிருந்து மறைத்திட மேலும், மேலும் நீலகண்ட சாஸ்திரியார் கற்பனை செய்து கொண்டே செல்கிறார் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
ஆதித்ய கரிகாலனின் மறைவிற்குப்பின் அருள்மொழிவர்மன் (லெய்டன் பட்டயமே இராஜராஜன் என்ற பெயரைக் கூறுகிறது) குடிமக்களால் அரியணை ஏறும்படி வேண்டிக் கொள்ளப் பெற்றாலும், உத்தமசோழனே அரியணை ஏற அவா கொண்டமையால் இராஜராஜன் அவர்கள் வேண்டுகோளை ஏற்கவில்லை. இதி-லிருந்து சுந்தரசோழன் இறந்தபின் வாரிசுச் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கற்பனை செய்கிறார்.
ஆனால், லெய்டன் பட்டயம் அவ்வாறெல்லாம் சிக்கல் ஏதும் குறிப்பிடாமல் மதுராந்தகன் என்ற உத்தமசோழன் ஆதித்யனின் மறைவிற்குப்பின் நேரடியாகவே பதவி ஏற்றதாகக் கூறுகிறது.
உத்தமசோழன் பதவியேற்க ஒப்புக் கொண்ட இராஜராஜன், உத்தம சோழனுக்குப்பின் தாமே பதவிக்கு வர வேண்டுமேயல்லாமல் உத்தம சோழனின் வாரிசு யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்று கூறி விட்டார் என்றும் நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.
இவ்வாறு இராஜராஜன் பதவியை உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்ததற்குக் காரணம் உள்நாட்டுப் போர்கள் ஏற்படாது தடுக்கவே என்றும் கூறுகிறார். இவ்வாறு தம் கற்பனையை அவிழ்த்து விடும் நீலகண்ட சாஸ்திரியார் தம் கற்பனைக் கருத்தை வலியுறுத்த சோழர்களின் காலத்துத் திருவாலங் காட்டுப் பட்டயத்தில் வடமொழியில் அமைந்து உள்ள 69 வரி வரியைச் சுட்டிக் காட்டினார்.
தென் இந்தியச் சாசனங்கள் (S11) தொகுதி மூன்றில் 205ஆம் எண் கொண்ட திருவாலங்காட்டுப் பட்டயத்தில் காணப்படும் வரிகளை ஆராய்ந்து பார்த்தால் எந்த இடத்திலும் உத்தமச் சோழன் கொலைக்குக் காரணமானவர் என்றோ அவருக்குப் பங்கிருந்தது என்றோ கூறத்தக்க சான்றுகளே இல்லை.
திருவாலங்காட்டுப் பட்டய வரிகளைக் கீழே காண்போம். அவை உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழலையோ, உத்தம சோழனுக்குப்பின் தாம்தான் அரசராக வருவோம் என்று இராஜராஜன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக இராஜராஜனுக்கு உத்தம சோழன் இளவரசு பட்டம் கட்டிய செய்தியே காணப்படவில்லை. திருவாலங்காட்டுப் பட்டயத்திலும், லெய்டன் பட்டயத்திலும் உத்தம சோழனின் மகன் மதுராந்தக கண்டராதித்தன் என்பவன் பெயர் காணப்படவில்லை. சோழர் அரியணையில் ஏறும்படி குடிமக்கள் வேண்டிய போதிலும் வலிமையான கலியுகத்தின் கண்களைக் குருடாக்கும் இருளை ஒழித்திட, அரச நடவடிக்கையின் உண்மை நிலையை உணர்ந்த அருள்மொழி வர்மன் தனக்கு அரியணை வேண்டுமென்று தன் மனத்தால் கூடக் கருதாமல் தன் சிற்றப்பா தன் அரியணைமீது கொண்டுள்ள ஆசையைப் புரிந்து விட்டுக் கொடுத்தார்.
அவர் உடலில் காணப்படும் அடையாளங்களாகக் கொண்டு மூன்று உலகங்களையும் காப்பவரான தாமரைக் கண்ணனான திருமால் இவ்வுலகில் அவதரித்துள்ளார் அருள்மொழிவர்மன் வடிவில் என உணர்ந்து மதுராந்தகன் தமது வாரிசாக முடி சூட்டித் தாம் இவ்வுலகை ஆளும் பொறுப்புச் சுமையை ஏற்றார்.
ஆனால், உத்தமச் சோழனை நீலகண்ட சாஸ்திரி சுயநலமி என்றும், பக்தியும் நேர்மையும் நிரம்பிய தாய் தந்தையருக்கும் பிறந்த முறை பிறழ்ந்து ஆசை உடையவர் என்றும், தன்னலமே பெரிதெனக் கருதியவர் என்றும் குறை கூறுகிறார். பார்ப்பனர்களுக்குக் கொலைச் சதியில் இருக்கும் பங்கைத் திசை திருப்பவே நீலகண்ட சாஸ்திரி இம்முயற்சி மேற்கொண்டு உள்ளாரோ என்று அய்யுற வேண்டி உள்ளது.
ஏ.வி. சுப்பிரமணிய அய்யர், பண்டைய தக்காணம் எனும் நூலில் பக் 243இல், இராஜராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகையில், மதுராந்தகன் என்ற உத்தமசோழரின் மகனுக்கு மூன்று வயதாக இருக்கலாம் என்கிறார்.
பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரியாருக்கு மூன்று மறுப்புகளைக் கூறுகிறார்.
முதல் மறுப்பு:
உத்தம சோழனுக்கு அக்கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின் ஆதித்த கரிகாலனின் தம்பியும், குடிகளால் அன்று பாராட்டிப் போற்றப் பெற்றவனும், பெரிய வீரனுமாகிய இராசராசசோழன் அரியணையைக் கைப்பற்றி தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தம் சோழன் பெற்று அரசாள உடன்பட்டு தான் பதுங்கிக் கொண்டிருக்க மாட்டார்.
இரண்டாம் மறுப்பு:
திருவாலங் காட்டுச் செப்பேடு இராஜராஜன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட தாம் விரும்புவதில்லை என்றுதன் குடிகளிடம் கூறினார் என்று கூறுவதிலிருந்து தன் அண்ணன் உத்தம சோழனால் கொல்லப்பட்டிருந்தால் அவர்பால் இவ்வளவு அன்பும், மதிப்பும் இராசராசர் வைத்திருக்க மாட்டார் என்பது தெளிவு என்று கூறுகிறார்.
மூன்றாம் மறுப்பு:
சாஸ்திரி கூறுவதை ஏற்க இயலாமைக்கு இன்றுமொரு கருத்து உள்ளது. உத்தமசோழன், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்திருந்தால் அல்லது அக்கொலையில் பங்கேற்றிருந்தால் குடிமக்கள் ஆதரவும் அரசியல் அலுவலர் துணையும் ஆட்சி நடத்த அவருக்குக் கிடைத்திருக்காது. உள்நாட்டில் அமைதியும் வளமும் நிரம்பியிருந்தது.
குழப்பம் ஏதுமின்றி சிறிதுமின்றி பதினாறு ஆண்டுகள் ஆட்சி அமைதி-யாக நடைபெற்றது என்பதற்குக் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.
திருவாலங்காட்டுப்பட்டயம் ஆதித்யர் தம் தலைநகரில் பாண்டிய அரசனின் தலையாகிய வெற்றித் தூணைச் சேர்த்தபின் விண்ணுலகம் காணும் அவாவில் மறைந்தார் என்று கூறுகிறார். உத்தம சோழனின் ஆட்சி உத்தமமான ஆட்சியாக அமைந்தது என்பதனை தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் 128,142,143,145,151 ஆகியன கச்சிபெட்டு, திருமலபுரம், திருவொற்றியூர், கோனேரிராசபுரம் முதலிய இடங்களில் அமைந்துள்ள ஆதி புரீசுவரர்கோவில், பிச்சாள் கோவில் முதலியவற்றிற்குத் தங்கம் வழங்கினான், முரசு, சாமரம் வழங்கினான் எனும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பனர்கள்
சோழர் காலத்திற்குமுன் வேதப் பார்ப்பனர்களுக்குக் கோவில் வழிபாட்டில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. ஏனென்றால் சென்னை அருங்காட்சிய 128ஆம் என்னுடைய சென்னைப்பட்டயம் உத்தம சோழன் கச்சிப்பேடு எனும் ஊரில் பிறப்பித்த ஆணை ஒன்றின் வாயிலாக நமக்குப் புதிய செய்தி கிடைக்கிறது.
பார்ப்பனர்களை எப்போது நியமிக்க வேண்டும் என்று உத்தம சோழன் ஆணையிடுகிறான் பாருங்கள். புனிதமான ஆலயங்களில் வழிபாடு நிகழ்ச்சிகள், முறைகளைக் கடமைகளை நன்கு உணர்ந்தவர் இந்தப் புனித ஆலயத்திற்குக் கிடைக்கவில்லையெனில், ஒரு பார்ப்பனர், வேதங்களில் நன்கு தேர்ந்தவர் மட்டும் வழிபாடு நிகழ்த்த நியமிக்கலாம் பார்ப்பனர்கள் ஆலயங்களில் எப்படி நுழைந்தார்கள் என்று எடுத்துக்காட்ட (SII.VoL III No.128 ð‚.164-_265)
(தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் தொகுதி 111, எண் 125, பக் 164 -_ 265) இனி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள்; அதனை நீலகண்ட சாஸ்திரி கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறியதற்கு உரிய ஆதாரத்தைக் காண்போம். சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டே சான்றாகும்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பார்ப்பனர்கள் கொலையைப் பஞ்சமாபாதகங்களில் ஒன்று என்று வகுத்தவர்கள்.
பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடி சோழ வீர மாதிராஜன் எனும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவர்கள். அரசாங்கப் பணியில் இருந்த பார்ப்பனர்கள் பஞ்சவன் பிரமாதிராசன் பாண்டிய நாட்டு அரசியல் அலுவலர். இவர்கள் கொலை செய்யக் காரணம் இருக்கக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?
கொலைக்குக் காரணம் அரசியல். பாண்டிநாட்டு அலுவலர் பஞ்சவன் பிரமாதிராஜன் எனும் பார்ப்பனன் தூண்டுதலால் பாண்டுநாட்டுப் பகைவர் தூண்டுதலே காரணம்.
எக்காரணம் பறறியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிக்கும் அவர்களின் உடன்பிறந்தவர் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். ஆயினும் உண்மைக் காரணம் ஏதும் தெரியவில்லை.
இனி ஒரு வினா பாக்கியுள்ளது உத்தமசோழன் ஆட்சியில் இக்கொலைகாரர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல், இராஜராஜன் காலத்தில் தண்டனை வழங்கப் பெற்றதே ஏன் எனும் கேள்விதான் அது.
இன்றுபோல் அன்று சதியை விரைந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லாமல், கொலையாளியைக் கண்டறிவது, தண்டனை வழங்குவது ஆகியவற்றில் சில ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சி முடிவெய்தியிருக்கலாம். அதனால் அடுத்து வந்த இராஜராஜன் ஆட்சியில் எஞ்சியோருக்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தவை இயல்பே.
மேலும் உத்தமசோழன் ஒருவருக்குத் தண்டனை வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும் என்று பண்டாரத்தார் வினா பொருத்தமாக எழுப்புகிறார்.
பார்ப்பனர்கள் மேலோர் உயர்ஜாதிக்காரர்கள உயர்பதவி வகித்தவர்களாயிற்றே, அவர்கள் கொலை செய்யும் அளவிற்குத் துணிச்சல் உடையவர்களாக இருப்பார்களோ என்றுகூட சிலர் கேட்கலாம்.
ஆனால் அக்கால வரலாற்றுச் சான்றுகள் பார்ப்பனர்கள் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
பார்ப்பனர்கள் ஓதல், ஓதுவித்தல் தொழிலைச் செய்து ஒதுங்கிவிடாமல் பழி பாவங்களைப் போதித்து விட்டு அவற்றைச் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
பாண்டிய மண்டலத்தில் வாமலபட்டன் என்ற பார்ப்பான் சக்தியானவன் என்றும், பார்ப்பானால் கொலை செய்யப்பட்டான் என்பதை ஆதாரத்தோடு, இக்கட்டுரையாளர் எழுதிய பாண்டியர் ஆட்சி முறை நூலில் பக்.86-_இல் காணலாம். அய்ந்து பார்ப்பனர்களும், சில வெள்ளாளர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் பார்ப்பனர்கள் சிலரைக் கொலை செய்தது. காதுகளை வெட்டியது, பார்ப்பனப் பெண்களை இழிவு செய்தது ஆகிய செய்திகளும் கல்வெட்டுகளில் உள்ளன.
கோவில் பணத்தைப் பார்ப்பன அர்ச்சகர்கள் கொள்ளையடிப்பது, நகைகளைத் திருடுவதும்கூட அந்நாளில் இருந்திருக்கிறது.
திருநாவக்குன்றமுடையராயனார் கோவில் அர்ச்சகர்கள் கோயில் பணத்தையும், நகையையும் திருடி எடுத்துச் சென்றுவிட்டனர் என்பதை ARE 1907 பகுதி 11 பத்தி 27இல் காணலாம்.
கல்கி பொன்னியின் செல்வன் என்னும் தம் நூலில் ஆதித்த கரிகாலன் கொலையை மய்யமாக வைத்து கதையைப் புனைந்தவர், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர் யார் என்று வினா எழுப்பினாரேயன்றி, அதைச் செய்தவர்கள் நான்கு பார்ப்பனர்கள், பாண்டியர் தூண்டுதல் காரணம் என்பதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.
எனவேதான் இன்று வாழும் 90 வயதுடைய வரலாற்றுப் பேராசிரியர் என். சுப்பிரமணியன் நம் ஆசிரியர் தமிழர் தலைவர் மதிப்பைப் பெற்ற பேராசிரியர் (அவரும் பார்ப்பனர்தான்) இவ்வாறு மறைத்ததை வரலாற்றியலும் முரணானது உண்மையைத் தலைகீழாக்கிய மாபெரும் புரட்டு முறைகேடான முடிவு என்று கூறுகிறார்.
நீலகண்டசாஸ்திரி சிறு பிழை செய்துவிட்டார் என்று கூறலாமா? சிறு பிழையா இது? உண்மை குழிதோண்டி புதைக்கப்பட அல்லவா செய்யப்பட்டுள்ளது?


7 comments:

  1. பாண்டிய மக்களைப் பொறுத்தவரை ஆதித்ய கரிகாலன் கொல்லப் பட வேண்டியவன். பாண்டிய மன்னனைக் கொன்று அவன் தலையை வீதிகளில் எட்டி உதைத்து அசிங்கப் படுத்திய கொடும் மனம் படைத்த பாதகன். அவரைக் கொன்றவர்களுக்கு பாண்டிய மக்கள் மிகவும் கடமைப் பட்டவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..,

    ReplyDelete
  2. மஹாபாரதம்-வனபருவம் (இப்பகுதியில் காணப்படும் தகவல்களின் சுருக்கம்):
    "பார்ப்பனன் தாசியைப் போல வாழ வேண்டும்;பாம்புகள், கரையாண் புற்றுகளை தமதாக்கிக் கொண்டு வாழ்வது போலவும்,வண்டுகள் பூவின் தேனைத் திருடி தங்களுடையதாகக் கொள்வது போலவும்,பிறருடைய கருத்துக்களைத் தமதாக்கிக் கொள்வதோடு,அவை அனத்தும் தங்க ளுடையனவே என உறுதியாக, உரிமையும் கொண்டாட வேண்டும்," உருகெழு செல்லூர்-பாய்ச்சலூர்-உத்தரமேரூ
    இன்றைய உத்தரமேரூர் மிகச் சிறந்த வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது. அங்கலம்மா- திருமகளாக கரிகால்சோழனான திருமாவளவனுடன் சேர்க்கப்பட்ட பிறகு அங்கிருந்த அங்கலம்மாவுக்காக அமைக்கப்பட்ட வழிபாட்டு மையங்களும் ப்ருஹுஆண்டவரான பெரியாண்டவர் மற்றும் அவரது துணைவி ரேணு காவுக்கான பரிகாரமையங்களும் சிலமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன.
    பார்கவ பிராமண சமதக்கினியின் வளர்ப்பு மகனால் கொலைசெய்யப்பட்டு; உடலும்தலையும் மாற்றிப்பொருத்தப்பட்டதால் அங்கலம்மாவும் ரேணுகாவும் சேர்ந்ததே மாறியம்மாவாக மாற்றம் கண்டனது. இதனால் மக்களிடையே மாறியம்மாவின் சிறப்பு மேலும் மதிப்படைந்தது. அங்கலம்மா குலதெய்வமாக கொண்டாடும் நிலைதோன்றியது.
    இன்றைய உத்தரமேரூரில் நிறுவப்பட்டிருந்த கரிகால்சோழனின் தங்கை- பரசுராமனால் புணர்ந்து கெடுக்கப்பட்ட பாவை; கரிகால்சோழனின் மனைவி அங்கலம்மா, ப்ருஹுஆண்டவரான பெரியாண்டவர்= சமதக்கினி; அவரது திணைவி ரேணுகா (ப்ருஹுஆண்டிச்சி), மேலும் பரசுராமனால் கொலைசெய்யப்பட்ட கன்னிமார் (சப்தகன்னியர்) மற்றும் பிறதெய்வங்களின் வழிபாட்டிடங்கள் அனைத்தும் அங்குதான் உள்ளன. அங்குதால் யாகவேள்வியில் அனைத்துக் கொலைகளும் செய்யப்பட்டன. பக்தி இயக்ககாலத்தில் இவற்றை மறைக்கவும் மாற்றவும் முயன்றபோது எதிர்ப்பு இருந்ததாகவும் தெரிகிறது . களப்பிரர், பல்லவர் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதி குறித்த தகவல்களைக் காண்போம்.
    நந்திவர்மபல்லவன் காலத்தில் கி.பி.750ம் ஆண்டுக்குப் பிறகு உத்தரமேரூர்ப்பகுதியை 1200 வைதீகபிராமணர்க்கு தானமாககொடுத்துள்ளான் .அக்காலத்தில் இப்பகுதி 'செல்லூர்' என இருந்ததாக நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
    அகநாநூறு:220:”..தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும்,
    கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்.... எனவும்;
    அகநாநூறு -90: “அருந்திறற் கடவுள் செல்லூர் குணாது
    பெருங்கடல் முழங்கிற்றாகி யாணர்
    இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
    கருங்கட் கோசர் நியமம்.......... எனவும்
    காணப்படுகிறது. அப்பொது இவ்வூரில் காளிகோட்டம், திருப்புலிவனம் என திருமாவளவனின் தங்கைக்கானதாகவும் இருந்துள்ளது. அதனையும் நமது இலக்கியங்களில் உண்மைப் பொருளை அறிய இயலாத வண்ணம் சிதைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
    இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் போர்த்தொழிலில் ஈடுபடாதபோது, விவசாயத்திலும், பருத்தி, பஞ்சு, நெசவு, ஆடை தயாரிப்பு எனத் தொழில் செய்தும் வாழ்ந்தவர்கள். அறிவாளர், வேளிர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கு எதிராகவும் பரசுராமனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டோரே கோசர்; அவர்களே நச்சினார்க்கினியரால் அருவாளர்= கொலைகாரர்கள் என அடையாளப்படுத்தினார்.

    ReplyDelete
  3. செல்லூரில் இவர்கள்மீது விதிக்கப்பட்ட வரிகளை செழுத்தாவிட்டால் உடமைகளும் நிலங்களும் பரிபோகும் என அறிவிக்கப்பட்டது கல்வெட்டு களில் காணப்படுகிறது. மேலும் இவர்களது குடும்பப் பெண்களை க்ஷத்திரியர், பிராமணர்க்கு மணம்செய்விக்க கி.பி.885ம் ஆண்டு ஆதொண்டன் என்னும் ஆதித்தசோழனால் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை ஏற்காத கைக்கோளர் இங்கிருந்து வெளியேறிக் குடியேறியபகுதிகளே குடியேற்றம் போன்றவை. குலதெய்வமான அங்கலம்மாவை மறக்காமல் நினைவுக்குறிகளை நிறுவி, ப்ருஹுஆண்டவருக்கு அல்லது ப்ருஹுஆன்டிச்சிக்கு வெட்டவெளியில் மிகப்பெரிய உரு (மாசானம்) அமைத்து, பலிகொடுத்து சாந்தப்படுத்துகின்றனர். மேலும் அங்கிருந்தபோது ஆடை தயாரிப்போராக இருந்தவர்கள்மீது பலகடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. இவற்றை மனுவின் சட்டங்களிலும் காணலாம். பத்து பல நூலைப்பெற்று ஆடைகள்தயாரித்து பதினோரு பல எடையாக கொடுக்க வேண்டும்.இல்லையேல் தண்டம் செழுத்தவேண்டும். துணி வெளுப்பதற்கும், சிவப்புச்சாயம் ஏற்றுவதற்கும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன; காரணம் செவ்வேல் முருகனை, பெண்தெய்வங்களை, தங்கள் குல தெய்வங்களுக்கு அடையாளமாக இவற்றை அணிந்துகொள்ளக் கூடாது என்பதுதான். இவைகுறித்த தகவல்களை -m m s s - page 33-sec 10 ல் (செங்கல்பட்டு மான்யுவெல்) காணமுடியும்.
    1088ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கன் 'திருக்காளத்திக் கல்வெட்டு' காளகஸ்தியில் இருந்த தேவரடியார்ப் பெண்டிரைப் பிராமணரின் பயண்பாட்டுக்காக அரண்மனைக்குக் கொண்டு சென்றதையும், மக்கள் எதிர்த்ததால் மீண்டும் திரிசூலமுத்திரை குத்தித் திருப்பி அனுப்பியதையும் தெரிவிக்கிறது. இதனையும் திரு.நீலகண்டசாஸ்த்திரியார் தனது வரலாற்று நூலில்' "தவறுதலாக தேவராட்டிப் பெண்கள் காளஹஸ்த்தியிலிருந்து குலோத்துங்கனின் அரண்மனைக்கு அனுப்பப்பட்டார்கள்" எனக் குறிப்பிட்டு மறைக்க முயன்றதையும் காண்கிறோம்.
    நீலகண்ட சாஸ்திரியின் நூல்களில் பல தகவல்கள் மாற்றி மறைக்கப்பட்டுள்ளன. காரணம் அவரது நூல்களைத் தமிழருக்கு எதிரானோரும் இலங்கையின் சிங்களருமே வெளியிட்டு உதவினர். அன்றைய பல்கலைக் கழகமும் இத்தகையோராலேயே மேலாண்மை செய்யப்பட்டன. மேலும் இலங்கையின் சிங்கள கூட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில் நீலகண்ட சாஸ்த்திரி செயல்பட்டவர் என்பதையும் அவரது பல செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அதனாலேயே கலிபோர்நியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் கபில் சிலபெல் "நீலகண்ட சாஸ்த்திரி ஒரு தெலுங்கு பிராமணர், அவருக்கு வரலாறே தெரியாது; தொல்தமிழ்[சங்க]ப் பாடல்களில் ஒன்றையாவது படித்தவரும் அல்லர்" எனும்படிக் கடுமையாகச் சாடியுள்ளார்.
    செல்லூரில் உள்ள வைகுந்தபெருமாள்கோயில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது. நின்ற, இருந்த, கிடந்த நிலைகளில் திருமால் உள்ளார். இக்கோயிலின் நான்கு மூலைகளிலும் இருந்த சிம்ம உருவங்கள் நீக்கப்பட்டுக் கருடன் உருவங்கள் வைக்கப்பட்டதாகக் கண்டுள்ளனர். சிம்ம உருவம் கிரேக்கரை அடையாளப்படுத்துபவை. அவர்களது வழிவந்தோரே பார்கவ பிராமணரும் பரசுராமனுமாவர். பெண் தெய்வமான கரிகால்சோழனின் தங்கை அவர்களைக் கொற்றவையாக அடக்கியாண்டதால் அவளது வாகணமானது. திருமகளான அங்கலம்மா, திரு மா உடன் சேர்க்கப்பட்டபோது இந்த மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெண் இல்லாமல் வாழ்க்கை இல்லை,பெண்ணைச்சார்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்னும் நிலையும்.பெண்களை இழிவுபடுத்திய வைதிக பிராமணீயம் ஒதுக்கப்பட்டதையும் காண்கிறோம். இழப்பை ஈடுசெய்ய பிருஹு வம்ச பிராமணர்; அனைத்துப் புராணங்களிலும், இதிஹாசங்களிலும் புகுத்தப்பட்டனர்.வேதத்தில் இடம் பெறாத பிருஹு-பார்கவ பிராமணர்கள் மஹா பாரத்தில் புகுத்தப்பட்டனர். கீதையில் “மஹர்ஷீனாம் ப்ருஹூரஹம்” என கிருஷ்ணன் 'ரிஷிகளில் நான் ப்ருஹுவாக இருக்கிறேன்' என கூறுவதாக மாற்றி எழுதிவைத்தனர். மஹா பாரதத்தில்-1.56-33 “இங்கிருப்பதெல்லாம் வேறு எங்கும் இருக்கலாம்; இங்கில்லாததை வேறு எங்கும் காணமுடியாது” என ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார்கள். தமிழில் உள்ள காப்பியங்களையும் இவர்கள் விட்டுவைக்க வில்லை. பழமையான கரிகால்சோழன் காலத்திய வரலாறு இரண்டு நூல்களாக "அறியா / சரியா வரலாறு சரியா?"- 2009 மற்றும் "பெண்ணே வரலாற்றை நம்பாட்ஹே நாணும் நாணும் . . . உங்கள் காதுகளுக்கான வாய் சங்கப்பாடல்கள்" 2012 ஆகியவை சரியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.இவற்றில் பல கோயில்களில் நடந்த திருட்டும் புரட்டும் குறித்த தகவல்களும் விரிவாக உள்ளன.

    ReplyDelete
  4. DEAR DRAVIDIAN ARSE
    DONT BRING CASTE IN EVERYTHING EVEN IN HISTORY ...
    THOSE DAYS BRAHMINS ARE NOT BORN ..THE WAY DOCTORS SON CANT BECOME DOCTOR A BRAHMINS SON CANT BECOME BECAUSE BRAHMIN IS SORRY WAS A KNOWLEDGE STATE ....DONT COMPARE THOSE DAYS EVENTS TO CREATE CASTE WEDGE AGAIN .......FIRST YOUY SHOULD LEARN HOW THE CASTE SYSTEM EVOLVED OVER A PERIOD ....DONT FEED SICKNEES TO THE SOCIETY ALREADY ENOUGH IN SOCIETY ...DUE TO BLIND SUPPORTER OF DRAVIDIAN CAUSE LIK MR DI KA PARTY .....DONT DIVIDE THE SOCIETY ON CASTE LINES .....B
    TAEK SOME RELAXATION DRUGS FROMYOUR DOCTOR FOR LIFE
    BREATH LIFE NOT HATE .....HOSTORY SAYS PORTUGESE KILLED THOUSANDS OF ABORIGINAL IN VARIOUS PART OF INDIA U WANT TO KILL ALL CHRISTIANS ,,,
    ARABS KILLED MADE MOUNTAIN CALLED HINDUKUSH ..
    U WANT TO KILL ALL MUSLIMS.....WHOSE FOREFATHERS RAPED TO SIRE THIER BLOOD INTO YOUR GREAT GRAND MOTHERS .....
    TIME IS A BIG HEALER ..
    GONE IS GONE SICK MAN ...RELAX ...GET LIFE
    PSE

    ReplyDelete
    Replies
    1. To know your birth you need some sort of proof. to know about your father and grand father and great father how they lived and contributed to our society,
      you need at-least 80% of truth with some document with it.

      if some one say that your grand father is a beggar and looted money by killing some humble being and he got married
      a prostitute and she gave birth to your father, for whom [might be] you born. will that be true. i hope not

      The same way as people of one society, whom you did not belong, when they seek truth by means of some R&D of ancient sculptures and scripts,
      which was twisted and tweaked by means of other society criminals, you should not comment on it.
      let them and their society people explore it. if your so called time heels you why you bother.
      They have all rights to bring their history back.

      people of some part of India believes that Lord Murugan is Big brother to Lord Ganapathy but people in south believes that Lord Murugan is younger to Lord Ganapathy. These two society people have their own proof for their belief. let us pray Lord Ganapathy and Murugan.

      Delete
  5. Personal: How are you sir? How is Rajesh? I am a resident of Peters' Colony.

    ReplyDelete