Saturday 30 October 2010

ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய பல்லவ மன்னர்கள்



தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே ஆரியப் பண்பாடு நுழைந்துவிட்டது என்றபோதிலும் ஜாதிமுறைஆரியத் திருமணமுறைஆரியர் கலை பரவிடவில்லை. ஆனால் ஏறத்தாழ கி.பி 250 லிருந்து கி.பி.900 வரை ஆட்சி செய்த பல்லவப்பேரரசர்கள் ஆரியப் பண்பாட்டின் கர்த்தாக்களாக விளங்கினர் என்பதற்குக் கல்வெட்டுகளும்செப்பேடுகளும் தகுந்த ஆதாரமாக விளங்குகின்றன.

பல்லவப் பேரரசின் தொடக்ககால மன்னர்கள் அளித்துக் கிடைத்துள்ள செப்பேடுகள் மூன்றுதான். அம்மூன்று செப்பேடுகளும்கூடத் தமிழில் எழுதப்பட்ட செப்பேடுகள் அல்ல. பிராகிருத மொழியில் அமைந்தவை. இதனாலேயே வரலாற்று ஆசிரியர்கள் இந்த முற்காலப் பல்லவர்களை முதல் பல்லவ மன்னர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்றழைக்கும் மரபு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பல்லவர்கள் அளித்த செப்பேடுகளுக்கு மயிதவோலுச் சேப்பேடுஹீரஹடஹள்ளிச் செப்பேடுகுணபதேயம் செப்பேடு ஆகும் மயிதவோலுச் செப்பேட்டையும்ஹீரஹடஹள்ளிச் செப்பேட்டையும் வழங்கியவர் பல்லவப் பேரரசரின் முதல்வராகக் கருதப்படும் சிம்மவர்மனின் மகன் சிவஸ்கந்தவர்மன்.

தனித்தமிழ்ப்பெயருடைய சேரசோழபாண்டியர்களுக்குப்பின் தமிழல்லாத வர்மன் (வர்மா) என்று முடியும் தமிழேயல்லாத பெயர் கொண்டவர்கள் இந்தப் பல்லவர்கள். நந்திவர்மன் என்பவன் பெயரில் மட்டும் நந்தி என்ற தமிழ்ச்சொல் இடம் பெற்றிருக்கும்.

நம் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள் எல்லாம் தமிழ் மண்ணின் இடப் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் வேள்விக்குடிசின்னமனூர்கரந்தை எனக் காணலாம். இந்தப் பல்லவர் செப்பேடுகளில் ஊர் பெயரே மயிதவோலுஹீரஹடஹள்ளிமஞ்சிக்கல்லுகுணபதேயம் என்று எல்லாம் தமிழல்லாத ஊர்ப் பெயர்கள். பல்லவப் பேரரசின் முதல்வராகப் போற்றப்படும் சிம்மவர்களின் காலத்துப் பல்லவராட்சி ஆந்திரம்கருநாடகத்தின் ஒரு பகுதிதமிழ்நாட்டில் தொண்டமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்திருந்தது எனலாம்.
மயிதவோலுச் செப்பேடு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குண்டூர் மாவட்ட நாசராவ் பேட்டைக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் உள்ள கிராமம் மயிதவோலு. அந்த ஊரில் கிடைத்ததாலேயே அப்பெயர். பல்லவ குலத்தின் முதற் செப்பேடு இது என்பர். மெல்லிய எட்டு ஏடுகள் கொண்ட தொகுதி இது. இவற்றை இணைத்திருக்கும் வளையத்தின் முகப்பில் நந்தியின் உருவம் உள்ளது. பிராகிருத மொழியில் இருபத்தெட்டு வரிகளில் அமைந்துள்ளது. இச்செப்பேட்டில் தமிழ் ஏதும் கிடையாது. கொண்டமுடிச் செப்பேடு எனப்படும் பிராகிருதச் செப்பேட்டின் எழுத்தை ஒத்துள்ளது.
பல்லவ மன்னவரான சிவஸ்கந்தவர்மன் இளவரசராக இருந்தபோது பிரம்மதேயமாக அதாவது பார்ப்பனனுக்கு தானமாக வழங்கிய தானத்தைப் பதிவு செய்திருக்கும் ஏடு இது. ஆம்! பார்ப்பானுக்குத்தான் தானம். அதற்குப் பெயர் பிரம்மதேயம். இம்மயிதவோலுச் செப்பேடு தான்யகேடம் எனும் இடத்து அரசு அலுவலருக்கு இத்தானம் குறித்து அளித்த ஆணையாகும்.

சிவஸ்கந்தவர்மன் யாருக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எதற்குக்   கொடுத்திருக்கிறான் பாருங்கள். தன்னுடைய வெற்றிக்குஅறம்ஆயுள்வலிமை ஆகியவை பெருகிடக் கொடுத்திருக்கிறான். அதற்காக ஆந்திரத்திலிருந்த விரிபுரம் எனும் ஊரைக் கொடுத்திருக்கிறான் அவ்வாறு கொடுத்தது பூர்வகோடி ஆர்யன் கோநந்தி ஆர்யன் என்ற இரண்டு பார்ப்பனர்களுக்கு. எப்போது கொடுத்தானாம்வேனிற்காலத்தில் ஆறாம்பட்சத்துப் பஞ்சமி நாளில் மன்னரே நீரை ஊற்றி அநாவது தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறான்.
பார்ப்பனியத்தின் செல்வாக்கைப் பல்லவமன்னன் எப்படி எல்லாம் செய்கிறான் பாருங்கள்.

தானமாகக் கொடுத்த விரிபுரம் கிராமத்திற்குப் பிரமதேயத்திற்கான அனைத்து விலக்குகளும் அளித்திருப்பதை இந்தப் பட்டயம் தான்யகேட அதிகாரிக்கு இந்தப் பட்டயம் அறிவிக்கிறது. அதாவது இக்கால அரசு ஆணை (G.O) போல. வேறுபாடு செப்பேட்டில் அளிக்கப்படுகிறது.

விலக்களிக்கப்பட்ட இந்த ஊருக்குள் படைவீரர்கள் நுழையக்கூடாது.
ஊருக்குள் வரும் அரசு அலுவலர் களுக்குச் சோறுவிறகுதண்ணீர்கட்டில் தங்குமிடம் ஆகியவற்றை ஊரார் தரவேண்டியதில்லை.
அதிகாரிகளால் இவ்வூருக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்படக்கூடாது.
உப்பிற்காக இவ்வூரில் குழி தோண்டக்கூடாது. பார்ப்பனர்களுக்குச் சலுகைகள் இவை. இவ்வாறான சலுகைகள் ஏராளம்.
இந்த விலக்குகளைத் தர மறுக்கும் அரசு அலுவலர்களுக்கும்பிரம்மதேய ஊரில் உள்ளவர்களுக்கும்தொல்லை தரும் அதிகாரிகளுக்கும் அரசரே சரீர தண்டனை வழங்குவார் என்று செப்பேடு எச்சரிக்கிறது.
ஹீரஹடஹள்ளிச் செப்பேடு
இது செப்பேடு முதலாம் சிவஸ்கந்தவர்மன் மகாராஜாவாக ஆனதும் வழங்கிய செப்பேடு. மயிதவோலு இளவரசராய் இருந்த போது வழங்கியது. ஹீரஹடஹள்ளிச் செப்பேடு அவர் மகாராஜாவாக இருந்தபோது வழங்கியது.

அதில் பார்ப்பனருக்கு சில்லரேகக் கொடுங்கை ஊர்அவர்களுக்கு உரிய நிலப்பங்கு செப்பேட்டில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள. சிவஸ்கந்தவர்மனின் முன்னோரான பப்பசுவாமி என்பவரிடம் தானமாகப் பெற்ற அந்தணர்கள் எண்ணிக்கை இருபத்திரண்டு ஆகும். சில்லரேகக் கொடுங்கை என்ற தானம் கொடுத்த சாதாஹளி மாவட்டத்தில் (தமிழகத்தில் அல்ல) இருந்தது.

பார்ப்பனர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட பிரம்மதேயமான இத்தகு கிராமங்களுக்கு 18 வகை விலக்குகள் அளித்துள்ளனர். மயிதவோலுவில் இடம்பெறாத சலுகைகளான அதிகாரிகளுக்குப் பால்தயிர் தரவும் வேண்டாம்காய்கறிகீரைமலர்கள் அளிக்கவேண்டாம்கள் இறக்கக் கூடாது ஆகியன இடம்பெற்றுள்ளன.
பார்ப்பனர்களின் அக்கிரகாரம்பார்ப்பனச்சேரி எப்படி உருவாகிறது பாருங்கள். சில்லரேகக் கொடுங்கையில் தோட்ட நிலத்தைத் தானமாகப் பெற்ற பார்ப்பனர்கள் தாங்கள் வாழும் கிராமமான ஆபிட்டியில் நெல்லடிக்கும் களம் அமைத்துக்கொள்வதற்கென நிலம்குடியிருப்பு மனைக்கொத்தளி நிலமும் பெற்றனர். பாதிக்கூலி தந்தால் போதுமானது எனும் திட்டத்துடன் நான்கு கூலியாள்களையும் இப்பார்ப்பனருக்கு சிவஸ்கந்தவர்மன் கொடுத்திருக்கிறான். அது மட்டுமல்லஇந்தப் பார்ப்பனர்களுக்கு ஆடை நெய்து தர வாய்ப்பாக தறிநெய்வோர் இரண்டுபேர் அளிக்கப்பட்டனர்.
இத்துடன் நிற்கவில்லை. தாம் அளித்த இந்தத் தானத்தை எதிர்கால அரசர்கள்அவர்களுடைய வாரிசுகள் வேறு மரபினராயினும் காத்துத் தரவேண்டும் என்று கைகூப்பி வேண்டியிருக்கிறான். அதாவது பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததைப்பாதுகாக்க வேண்டுமாம்
அவ்வாறு காத்துத் தராதவர்மனிதரில் களஉயராய் பஞ்சமாபாதகங்களின் தோஷத்தை அடைவார்கள் என்று சாபம் வேறு. இன்னும் இருக்கிறது.
இந்தப் பட்டயத்தை எழுதியவன் அரசரின் அந்தரங்கச் செயலாளரான பட்டி சம்மன் என்ற பார்ப்பான் ஆவான்.
இவ்வாறு பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்ததே மன்னனின் மூடநம்பிக்கைகதான். இந்தப் பட்டயம் சிவஸ்கந்தவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் மழைக்காலத்தில் ஆறாம் பட்சத்தின் பஞ்சமி நாளில் வழங்கப்பட்டது. என்றும் கூறப்பட்டுள்ளது.
சிவஸ்கந்தவர்மனின் ஆட்சி. நூறாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் சந்திரன்நட்சத்திரங்கள்சூரியன் உள்ள காலம்வரை நிலைத்திருக்க வேண்டும் என்று மன்னரே வழங்கியபட்டயம். ஆணத்தி யாக இருந்து நிறைவேற்றிய பட்டயம் அதாவது முன்னின்று  வழங்கிய இது.
செப்பேட்டில் யாரேனும் ஒருவன்தான் அரசனுக்குப் பிரியமானவன் என்ற மதத்தால் (ஆணவத்தால்) இந்த தர்மத்துக்குக் கொடுமையோ தீமையோ செய்தாலும்தொல்லை அளித்தாலும் அவனை நாம் நிச்சயம் தடுப்போம் என்று எச்சரிக்கைகள் வேறு.
பார்ப்பனியத்துக்கு ஏன் இந்த உயர்வு என்று பொங்கிய பகுத்தறிவாளர்கள் அன்றும் இருந்திருக்கின்றனர் போலும்.
யார் ஆட்சி வந்தாலும் பார்ப்பனியம் சாதித்துக் கொள்கிறதே என்று வருந்தியவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள். அன்றும் பெரிய இடத்துத் தொடர்புள்ள துணிவில் தவறு செய்யும் போக்குகளும் இருந்துள்ளன. எப்படியோ பார்ப்பனியம் தன் ஆதிக்கக் கொடியை நாட்டி ஆள்வோரை மயக்கி விடுகிறது என்று தோன்றுகிறது.
இவ்வாறு தொடக்ககாலப் பல்லவர்களால் வழங்கப்பட்ட மூன்று பிராகிருதச் செப்பேடுகளும் அரச மரபினர் அறிந்த தானங்களுக்கான ஆவணங்களாகும்.
பல்லவர் செப்பேடுகள் முப்பது எனும் நூலில் இந்தச் செப்பேடுகளின் பிராகிருத மொழி வாசகங்களையும்தமிழ் மொழி பெயர்ப்புக் குறித்தும் காணலாம்.
பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் இதே போல் பார்ப்பனியத்தை ஆதரித்தனர். அதனால்தான் தமிழன் இராஜராஜன் தான் கட்டிய கோயிலுக்கு வடநாட்டில் இருந்து ஈசான சிவாச்சாரியாரை அழைத்துக் குடமுழுக்குச் செய்தான். அவன் மகன் ராஜேந்திர சோழனும் பார்ப்பனீயத்தைத் தோள் கொடுத்து உயர்த்-தினான் என்பது பகுத்தறிவாளர் காணும் குறைபாடு.
- தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய 
பல்லவ மன்னர்கள்,செப்பேடுகள் கூறும் உண்மைகள்
என்னும் தலைப்பில் எழுதி,
விடுதலை ஞாயிறு மலரில் (30-10-2010)வெளிவந்த கட்டுரை 





1 comment: